
அமெரிக்க கிரிக்கெட்டின் ஒருநாள் மற்றும் டி-20 அணியின் தலைவராக மொனாக் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் புதிதாக தடம்பதித்து வரும் அமெரிக்க அணி அண்மைக்காலமாக சிறப்பாக விளையாடி வருகிறது.
அந்தவரிசையில் தற்போது பல நாடுகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் கிரிக்கெட் வீரர்களும் தற்போது அமெரிக்க அணியில் இணைந்து விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க கிரிக்கெட் அணி இம்மாதம் 22 ஆம் திகதி முதல் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடவுள்ளது.
மேலும் ஐ.சி.சி இன் உறுப்பு நாடொன்றுடன் அமெரிக்கா விளையாடும் முதல் தொடராகவும் இது அமையவுள்ளது.
இதற்கிடையில் இத்தொடருக்கான அமெரிக்க அணியின் தலைவராக விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான மொனாக் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் குஜராஜ் மாநிலத்தில் பிறந்த இவர், அமெரிக்க குடியுரிமைப் பெற்று விளையாடி வருகின்றார்.
அதேசமயம் அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடருக்கான அமெரிக்க அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டி-20 அணி: மொனாக் படேல் (தலைவர்), கரிமா கோர், ஆரோன் ஜோன்ஸ், மார்டி கெய்ன், அலி கான், ஜஸ்கரன் மல்ஹோத்ரா, சேவியர் மார்ஷல், சௌரப் நேத்ரவல்கர், நிசார்க் படேல், கஜானந்த் சிங், ஜெஸ்ஸி சிங், ஸ்டீவன் டெய்லர், ரஸ்டி தெரோன், வாட்ஸ் வகேலா.
ஒருநாள் அணி: மொனாக் படேல் (தலைவர்), ராகுல் ஜரிவாலா, ஆரோன் ஜோன்ஸ், நோஸ்துஷ் கென்ஜிகே, அலி கான், ஜஸ்கரன் மல்ஹோத்ரா, சேவியர் மார்ஷல், சுஷாந்த் மோதானி, சௌரப் நேத்ரவல்கர், நிசார்க் படேல், கஜானந்த் சிங், ஜெஸ்ஸி சிங், ஸ்டீவன் டெய்லர், வத்சல் வகேலா.