January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்க தொடர்: மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள்

தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் மும்பையில் 3 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்திய அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 ஆம் திகதியும், ஒருநாள் தொடர் ஜனவரி 19 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.

இதில் ஒருநாள் தொடருக்கான தலைவராகவும், டெஸ்ட் தொடருக்கான உப தலைவராகவும் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதற்காக மும்பை வந்துள்ள இந்திய அணி வீரர்கள், விமான நிலையம் அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

இது இவ்வாறிருக்க, இந்திய அணி டிசம்பர் 16 ஆம் திகதி மும்பையிலிருந்து தனி விமானம் மூலம் தென்னாபிரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது.