இந்த ஆண்டு எல்.பி.எல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் வெற்றியீட்டிய ஜப்னா கிங்ஸ் அணி, பிளே-ஒப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.
அந்த அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 இல் வெற்றிபெற்று 8 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இதில் இறுதியாக அந்த அணி விளையாடிய கண்டி வொரியர்ஸ் அணியுடனான போட்டியில் டக்வர்த் லுவிஸ் முறைப்படி 7 விக்கெட்டுகளாலும், கொழும்பு ஸ்டார்ஸ் அணியுடனான போட்டியில் 93 ஓட்டங்களாலும் வெற்றிகளைப் பதிவுசெய்தன.
இதனிடையே, 5 போட்டிகளில் விளையாடி 3 இல் மாத்திரம் வெற்றியீட்டி 7 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ள தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி 2 ஆவது இடத்திலும், 6 போட்டிகளில் விளையாடி 2 இல் மாத்திரம் வெற்றிபெற்றுள்ள கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 5 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும் உள்ளன.
இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணியுடனான போட்டியில் 41 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
கொழும்பு ஸ்டார்ஸ் அணி இறுதியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த பிறகு நேற்றைய போட்டியில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில், இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ள கண்டி வொரியர்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.