
2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 15 ஆவது ஐ.பி.எல் தொடரின் வீரர்கள் ஏலம் எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்த மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத முற்பகுதியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 15 ஆவது ஐ.பி.எல் தொடரில் புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டிக்காக ஏற்கனவே உள்ள 8 அணிகளும் மொத்தம் 27 வீரர்களை தக்கவைத்தது.
புதிய அணிகளான லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகள் தலா 3 வீரர்களை ஏலத்துக்கு முன்பே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
எனவே, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், சுரேஷ் ரெய்னா, அஸ்வின், சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்களை எடுக்க புதிய அணிகள் ஆர்வத்துடன் உள்ளன.
இதில் கடந்த சீசனில் ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியிலும், அஸ்வின், ஸ்ரேயாஸ் அய்யர் டெல்லி கேபிடல்ஸ் அணியிலும், ரெய்னா சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலும், சுப்மன் கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் விளையாடினார்கள்.
அந்த வகையில் இம்மாத இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ ஐ.பி.எல் தொடரின் மெகா ஏலம் நடைபெறலாம் என்றும், மும்பை அல்லது சென்னையில் மெகா ஏலம் நடைபெறலாம் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.