
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீராங்கனை ஸ்ரீமாலி சமரகோன் தங்கப் பதக்கம் வென்றார்
பொதுநலவாய பளுதூக்கல் மற்றும் உலக பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடர்கள் உஸ்பெகிஸ்தானின் தஸ்கென்ட் நகரில் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகியது.
இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 45 கிலோ எடைப் பிரவில் பங்குகொண்ட இலங்கை வீராங்கனை ஸ்ரீமாலி சமரகோன், 136 கிலோ கிராம் எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.
இறுதியாக 2019 தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர், 2015 பொதுநலவாய விளையாட்டுப் விழாவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் விளையாட்டு விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பிரிவில் இரண்டாம் வருட மாணவியான ஸ்ரீமாலி, கண்டி மஹாமாயா பெண்கள் கல்லூரியின் பழைய மாணவி ஆவார்.