January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய ஒருநாள் அணியின் தலைவராக ரோகித் சர்மா நியமனம்

Photo: Twitter/BCCI

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி இம்மாத இறுதியில் தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில், ரோகித் சர்மா உதவி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் இந்திய ஒருநாள் அணியின் தலைவராக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக டி-20 உலகக் கிண்ணத் தொடருடன் டி-20 தலைவர் பதவியை இராஜினாமா செய்த விராட் கோலி, தற்போது ஒருநாள் அணிக்கான தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.

மேலும் 18 பேர் அடங்கிய இந்திய டெஸ்ட் குழாத்தில் ரவீந்திர ஜடேஜா, சுப்மன் கில், அக்சர் படேல், ராகுல் சஹார் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

அதேசமயம் அஜிங்கியா ரஹானே, புஜாரா, ஷர்துல் தாக்கூர், ஹனுமா விஹாரி ஆகியோருக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலி (தலைவர்), ரோகித் சர்மா, கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, அஜிங்கியா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விருத்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், மொஹமட் சிராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.