கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான எல்.பி.எல் லீக் ஆட்டத்தில் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இம்முறை எல்.பி.எல் தொடரில் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி ஈட்டிய இரண்டாவது வெற்றி இதுவென்பதுடன், கொழும்பு ஸ்டார்ஸ் அணி முதல் தோல்வியை சந்தித்தது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை எடுத்தது.
பில் சோல்ட் 62 ஓட்டங்களையும், நஜிபுல்லாஹ் சத்ரான் 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொள்ள, பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.
196 என்ற சவாலான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணியால் 18.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.
அந்த அணிக்காக சந்திமால் 26 ஓட்டங்களையும், டொம் பண்டன் 23 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுக்க, பந்துவீச்சில் நுவன் பிரதீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்படி, 18 ஓட்டங்களால் வெற்றியீட்டிய தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி இம்முறை எல்.பி.எல் தொடரில் 2 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.
போட்டியின் ஆட்டநாயகன் விருது தம்புள்ள அணியின் ஆரம்ப வீரர் பில் சோல்ட்டுக்கு வழங்கப்பட்டது.