July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

எல்.பி.எல் தொடரில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையினால் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எல்.பி.எல் தொடர் கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.

15 நாட்கள் நடைபெறவுள்ள இந்த எல்.பி.எல் தொடரில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் சியால்கோட்டில் பிரியந்த குமார என்ற இலங்கை பொறியியலாளர் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் அடித்தும் எரித்தும் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது இலங்கையில் நடைபெற்று வருகின்ற எல்.பி.எல் தொடரில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு இலங்கை கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டு எல்.பி.எல் தொடரில் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 20 வீரர்களும், பயிற்சியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுள் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான மொஹமட் ஹபீஸ், சொஹைப் மலிக், வஹாப் ரியாஸ், அஹ்மட் ஷஸாத் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.