January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் 2021: கண்டியை வீழ்த்திய கோல் கிளேடியேட்டர்ஸுக்கு 2ஆவது வெற்றி

எல்.பி.எல் தொடரில் கண்டி வொரியர்ஸ் அணிக்கும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கும் இடையில் நேற்று இரவு கொழும்பில் நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான போட்டியில் 4 விக்கெட்களால் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி வெற்றிபெற்றது.

இம்முறை எல்.பி.எல் தொடரில் கோல் கிளேடியேட்டர்ஸ் ஈட்டிய இரண்டாவது வெற்றி இதுவாகும்.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த கண்டி வொரியர்ஸ் அணி. 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.

அந்த அணி சார்பில் அஹ்மத் ஷேஸாத் 56 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் 32 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் சமித் படேல் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், தனஞ்சய லக்ஷான் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

144 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, 19.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று திரில் வெற்றியீட்டியது.

தனுஷ்க குணதிலக்க (45), பானுக ராஜபக்ஷ (22), லஹிரு மதுஷங்க (22), ஆகியோர் துடுப்பாட்டத்தில் அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் சச்சிந்து கொலம்பகே 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகன் விருது தனஞ்சய லக்ஷானுக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியோடு கோல் கிளேடியேட்டர்ஸ் அணி எல்.பி.எல் தொடரில் தமது இரண்டாவது வெற்றியினை பதிய, கண்டி வொரியர்ஸ் அணி இரண்டாவது தொடர் தோல்வியினைப் பெற்றுக்கொண்டது.