July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் 2021: கோல் கிளேடியேட்டர்ஸை வீழ்த்தியது கொழும்பு ஸ்டார்ஸ்

Photo: Sri Lanka Cricket

கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கெதிரான எல்.பி.எல் தொடரின் 3 ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எல்.பி.எல் தொடரில் நடைபெற்ற 3 ஆவது லீக் போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் – கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்களை எடுத்தது.

துடுப்பாட்டத்தில் பென் டங் 38 ஓட்டங்களையும், இசுரு உதான 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

கொழும்பு அணியின் பந்து வீச்சில் தனன்ஜய டி சில்வா, துஷ்மந்த சமீர மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

இதனையடுத்து 117 என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, 17.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அந்த அணிக்காக இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய தினேஷ் சந்திமால் 26 ஓட்டங்களையும், டேவிட் வீசா 22 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வித்திட்டனர்.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் நுவன் துஷார மற்றும் புலின தரங்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

இதன்படி, 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, இம்முறை எல்.பி.எல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய, கோல் கிளேடியேட்டர்ஸ் அணி முதல் தோல்வியை சந்தித்தது.