July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒமிக்ரோன் பரவல்: இந்தியா – தென்னாபிரிக்கா தொடர் ஒத்திவைப்பு!

ஒமிக்ரோன் வைரஸ் பரவல் காரணமாக இந்திய அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் ஒரு வாரத்தினால் ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

தென்னாபிரிக்கா செல்லவுள்ள இந்திய அணி, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், நான்கு டி–20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17ஆம் திகதி ஜொகனஸ்பர்க்கில் ஆரம்பமாக இருந்தது.

ஆனால் தென்னாபிரிக்கா உட்பட பல்வேறு ஆபிரிக்க நாடுகளில் திடீரென பரவி வரும் ‘ஒமிக்ரோன்’ என்ற புதிய வகை கொரோனா காரணமாக உலகம் முழுவதும் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இத்தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், வீரர்களின் நலன் கருதி, இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் இணைந்து தொடரை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை இரண்டாக குறையலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுஇவ்வாறிருக்க, இந்திய அணித்தலைவர் விராட் கோலி கூறுகையில், தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் குறித்த தெளிவான முடிவு ஓரிரு தினங்களில் தெரியவரும். தற்போது எங்கள் கவனம் முழுவதும் நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் மீது மட்டும் உள்ளது என தெரிவித்தார்.