July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் தொடரிலிருந்து விலகும் அஞ்சலோ மெத்யூஸ்

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது உபாதைக்குள்ளாகிய அஞ்சலோ மெத்யூஸ், எல்.பி.எல் தொடரில் விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டத்தில் அஞ்சலோ மெத்யூஸ் தொடை உபாதைக்கு முகம் கொடுத்திருக்கின்றார்.

இதனையடுத்து அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறியிருந்தார். பின்னர் சரிவில் இருந்த இலங்கையின் நிலைமை கருத்திற்கொள்ளப்பட்டு மெதிவ்ஸ் 8 ஆவது விக்கெட்டுக்குப் பின்னர் களம் வந்து 29 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இலங்கையின் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்திருந்தார்.

இதனிடையே, மெத்யூஸுக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் குறைந்தது 4 வாரங்கள் ஓய்வளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள எல்.பி.எல் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை எல்.பி.எல் தொடரில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஞ்சலோ மெத்யூஸ் கால் தசை உபாதைகளுக்கு அடிக்கடி முகம் கொடுக்கின்ற ஒரு வீரராகவும் காணப்படுகின்றார்.இதனால் பந்து வீசுவதையும் தவிர்த்து துடுப்பாட்டத்தில் மாத்திரம் அவதானம் செலுத்தினார்.

இதனிடையே, 2021 ஆம் ஆண்டின் மே மாதத்திற்குப் பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பிய அவருக்கு தற்போது ஏற்பட்டுள்ள தொடை உபாதையின் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியில் தொடர்ந்து நீடிப்பதில் சந்தேகம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.