July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளிப் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான்!

ஐ.சி.சியின் 2021-23 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் இந்திய அணியை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கும் இடையில் சிட்டகொங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளால் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் புள்ளிப் பட்டியலில் 66.66  வீத புள்ளிகளை அந்த அணி பெற்றுக் கொண்டது.

இந்திய அணி 2021-23 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இதுவரை 2 வெற்றி, 1 தோல்வி, 2 போட்டிகளில் சமநிலை செய்துள்ளது. அதன்மூலம் 50 வீத புள்ளிகளை வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இலங்கை அணி ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அவுஸ்திரேலிய அணி இதுவரை எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை.