January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2022: தக்கவைக்கப்பட்ட வீரர்களும், வாங்கப்பட்ட தொகையும்!

2022 ஆம் ஆண்டின் ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தக்கவைத்த வீரர்கள் மற்றும் வாங்கப்பட்ட தொகைக் குறித்த விபங்களை வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் 15 ஆவது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக இணைவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடைபெறவுள்ளது.

இதனால் அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும்.

அதேபோல புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 2 அணிகளும் அதிகபட்சமாக 3 வீரர்களை தேர்வு செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற விதிமுறைகளை ஐ.பி.எல் நிர்வாகம் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது.

அந்தவகையில், அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

இதன்படி அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஐ.பி.எல் அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களும், வாங்கப்பட்ட தொகைகளும்

மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா – 16 கோடி ரூபா, ஜஸ்ப்ரித் பும்ரா – 12 கோடி ரூபா, சூர்யகுமார் யாதவ் – 8 கோடி ரூபா, கிரென் பொல்லார்ட் – 6 கோடி ரூபா.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

விராட் கோலி – 15 கோடி ரூபா, கிளென் மெக்ஸ்வெல் – 11 கோடி ரூபா, மொஹமட் சிராஜ் – 7 கோடி ரூபா.

ராஜஸ்தான் ரோயல்ஸ்

சஞ்சு சாம்சன் – 14 கோடி ரூபா, ஜோஸ் பட்லர் – 10 கோடி ரூபா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 4 கோடி ரூபா.

பஞ்சாப் கிங்ஸ்

மயன்க் அகர்வால் – 12 கோடி ரூபா, அர்ஷ;;தீப் சிங் – 4 கோடி ரூபா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கேன் வில்லியம்சன் – 14 கோடி ரூபா, அப்துல் ஸமாத் – 4 கோடி ரூபா, உம்ரான் மாலிக் – 4 கோடி ரூபா.

சென்னை சுப்பர் கிங்ஸ்

எம் எஸ் டோனி – 12 கோடி ரூபா, ரவீந்திர ஜடேஜா – 16 கோடி ரூபா, ருதுராஜ் கெய்க்வாட் – 6 கோடி ரூபா, மொயின் அலி , 8 கோடி ரூபா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சுனில் நரைன் – 6 கோடி ரூபா, ஆண்ட்ரே ரஸ்ஸல் – 12 கோடி ரூபா, வருண் சக்கரவர்த்தி – 8 கோடி ரூபா, வெங்கடேஷ; ஐயர் – 8 கோடி ரூபா.

டெல்லி கேப்பிடல்ஸ்

ரிஷப் பாண்ட் – 16 கோடி ரூபா, பிரித்வி ஷh – 7.5 கோடி ரூபா, அண்ட்ரிச் நோர்ட்ஜே – 6.5 கோடி ரூபா, அக்ஸர் படேல் – 9 கோடி ரூபா.