
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்ன் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவுஸ்திரேலியாவின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளரான ஷேன் வோர்ன் தன் குடும்பத்துடன் சிட்னியில் வசித்து வருகிறார்,
இந்த நிலையில், தனது மகன் ஜாக்சனுடன் ஷேன் வோர்ன், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வாகனம் ஒன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயமுற்ற நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
52 வயதான வோர்ன், இந்த விபத்தில் கடுமையான காயம் எதுவும் ஏற்படாவிட்டாலும் , கடும் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து தனது உடலில் வேறு ஏதும் உபாதைகள் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து ஷேன் வோர்ன் கூறுகையில், ‘நான் கொஞ்சம் அடிபட்டு காயமடைந்துள்ளேன். மிகவும் வேதனையாக இருக்கிறேன்’ என்று தெரிவித்ததாக தி ஏஜ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அடுத்த மாதம் 8 ஆம் திகதி கபாவில் ஆரம்பமாகவுள்ள முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான வர்ணனை செய்யும் பணிக்கு ஷேன் வோர்ன் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.