
Photo: Sri Lanka Cricket
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான டில்ருவன் பெரேராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உள்ளூர் கழகங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதில் இன்று (26) பாணந்துறை விளையாட்டு கழகத்துக்கும், ஏஸ் கெபிடல் கிரிக்கெட் கழகத்துக்கும் இடையிலான போட்டி தொபகொட கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது.
எனினும், பாணந்துறை விளையாட்டுக் கழகத்துக்காக விளையாடி வருகின்ற இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டில்ருவன் பெரேராவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த போட்டியை உடனடியாக கைவிடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக டில்ருவன் பெரேராவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.