ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் வித்தான, உலக மாஸ்டர்ஸ் பெட்மின்டன் சம்பியன்ஷிப் தொடருக்கு தெரிவாகியுள்ளார்.
இப்போட்டித் தொடரானது, இம்மாதம் 25 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை ஸ்பெய்னின் செவில்லே நகரில் நடைபெறவுள்ளது.
இவர் 2019 இல் நடைபெற்ற கம்பஹா மாவட்ட பெட்மின்டன் சம்பியன்ஷிப் தொடரில் சம்பியனாகியிருந்ததுடன், 40 வயதிற்கு மேற்பட்ட போட்டிப் பிரிவில் கம்பஹா மாவட்ட பெட்மின்டன் சம்பியனாகவும் தெரிவாகியிருந்தார்.
2021 ஆம் ஆண்டில் நுவரெலியாவில் நடைபெற்ற அகில இலங்கை பெட்மின்டன் தொடரில் சம்பியன் பட்டத்தையும் வென்றார்.
அத்துடன், 2018,2019 ஆகிய ஆண்டுகளில் இலங்கை எல்லே சம்மேளனத்தின் தலைவராகவும் இவர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, உலக பெட்மின்டன் போட்டியொன்றில் பங்கேற்கும் இலங்கையின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்பையும் இவர் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.