July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய வீரர்களுக்கு ‘ஹலால்’ உணவு சாப்பிடுமாறு உத்தரவு!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறி ஆகியவற்றை சாப்பிடக்கூடாது என்று பிசிசிஐ கொண்டுவந்துள்ள உணவு கட்டுப்பாட்டு முறை மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

நடைபெற்று முடிந்த டி-20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி, புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோகித் சர்மாவின் தலைமைத்துவத்தில் இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை 3க்கு 0 என கைப்பற்றியது.அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணத் தொடருக்காக இந்திய அணி தீவிர தயாரிப்பை இப்போதே ஆரம்பித்துவிட்டது.

இதன் ஓர் அங்கமாக இந்திய வீரர்களின் உடற்தகுதியை பராமரிப்பதில் கவனம் செலுத்தும் வகையில், இந்திய வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடுகளை பிசிசிஐ கொண்டுவந்துள்ளது.

அதன்படி, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறி ஆகியவற்றை சாப்பிடக்கூடாது என்றும், ஹலால் அசைவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

எனவே இனிமேல் அசைவ உணவுகளை சாப்பிட விரும்பும் கிரிக்கெட் வீரர்கள் அனைத்துவிதமான அசைவ உணவுகளையும் சாப்பிடமுடியாது.