July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 இல் விராட் கோலியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

Photo: Twitter/BCCI

டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக அரைச்சதம் அடித்த விராட் கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது டி-20 போட்டியில் இந்திய அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி-20 தொடரை 3-0 என வென்று அசத்தியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்களை எடுத்தது. இதில் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா 56 ஓட்டங்களை விளாசினார். இது ரோகித் சர்மாவின் 30ஆவது டி-20 அரைச்சதமாகும்.

இதன்மூலம் டி-20 போட்டிகளில் அதிக அரைச்சதம் அடித்த விராட் கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்தார்.

இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா 30 அரைச்சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 29 அரைச்சதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் 25 அரைச்சதத்துடம் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மேலும், சர்வதேச டி-20 போட்டிகளில் 150 சிக்ஸர்கள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற மைல்கல்லையும் ரோகித் சர்மா எட்டியுள்ளார்.

டி-20 போட்டிகளில் 150க்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் 161 சிக்ஸர்களுடன் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் முதலிடத்தில் உள்ளார்.

இதனிடையே, டி-20 போட்டிகளில் 4 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.