July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நானும் எனது தந்தையும் தோனியின் ரசிகர்கள்; தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

photo:Chennai Super Kings_facebook

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 14ஆவது சீசனில் கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
முதலமைச்சராக மட்டுமல்ல தோனி ரசிகராகவும் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என‌ தெரிவித்திருக்கிறார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மகேந்திரசிங் தோனி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 7 என்ற பெயர் பொறித்த ஜெர்சியை வழங்கினார் .

பாராட்டு விழாவில் பேசிய தோனி, சி.எஸ்.கே அணி சரியாக செயல்படாத போதும் ரசிகர்கள் தங்களுக்கு ஆதரவு தந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திய, ஆதரவளித்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி என தோனி குறிப்பிட்டுள்ளார்.

‍தமிழக ரசிகர்கள் மாற்று அணி வீரர்களையும் உற்சாகப்படுத்துவார்கள்.அதுதான் அவர்களது சிறப்பு என தோனி பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

சென்னையும் தமிழ்நாடும் தனக்கு அதிகமானவற்றை கற்று கொடுத்துள்ளதாக தோனி மகிழ்ச்சியுடன் கூறினார்.

தனது முதல் போட்டி சென்னையில் நடைபெற்றது என நினைவு கூர்ந்த தோனி, தனது கடைசி போட்டியும் சென்னையில்தான் நடக்கும் என நம்புவதாக தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து இந்த பாராட்டு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் முதலமைச்சராக மட்டுமல்ல தோனி ரசிகராகவும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருப்பதாக கூறியுள்ளார்.

தான் மட்டுமல்ல, தனது தந்தை கருணாநிதியும் தோனியின் ரசிகர் என முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

தமிழர்கள் அனைவரும் பச்சை தமிழர்கள் என்றால், தோனி மஞ்சள் தமிழர் என அவர் அணியும் டி-ஷர்ட்டின் நிறம் குறித்து முதலமைச்சர் ஒப்பிட்டுள்ளார்.

மிகுந்த மகிழ்ச்சியோடு இந்த பாராட்டு விழாவிற்கு தான் வந்திருப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர், இருந்தபோதும் மனம் வெள்ள பாதிப்புகளை சரி செய்வது குறித்து சிந்தித்துக் கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சென்னை என்றாலே சூப்பர்தான், மீண்டும் ஒருமுறை அது நிரூபிக்கப்பட்டுள்ளது என சி.எஸ்.கே. அணி பாராட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

This slideshow requires JavaScript.