July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பீபா’ தலைவர் ஜியானி இன்பன்டீனோ இலங்கை ஜனாதிபதி, பிரதமரை சந்தித்தார்

Photo: Facebook/ Football Sri Lanka

இலங்கை வந்துள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்பன்டீனோ இன்று பிற்பகல் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தார்.

இலங்கை கால்பந்து சங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அவர் இலங்கை வந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, இலங்கை கால்பந்து சங்கத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

இன்று இரவு கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் நடைபெறவுள்ள, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அழைப்பு கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக பீபா தலைவர் ஜியானி இன்பன்டீனோ கலந்துகொள்ளவுள்ளார்.

இலங்கை, மாலைதீவுகள், பங்களாதேஷ் மற்றும் சீசெல்ஸ் உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கிடையில் நடைபெற்ற இந்தப் போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை, சிசெல்ஸ் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இலங்கை வந்துள்ள பிபா தலைவர் ஜியானி இன்பனடீனோ, இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை அநுராதபுரத்தில் வைத்து சந்தித்தார்.

இதன்போது, பிபா தலைவரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பெயர் பொறிக்கப்பட்ட விசேட ஜேர்சியொன்றும், கால்பந்தொன்றும் கையளிக்கப்பட்டதுடன், இலங்கை கால்பந்து விளையாட்டின் எதிர்காலம் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.