2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் டி-20 கிரிக்கெட்டை இணைத்துக்கொள்ள ஐ.சி.சி. முயற்சித்து வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி-20 உலகக் கிண்ணம் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான டி-20 உலகக் கிண்ணத் தொடரை இணைந்து நடத்தும் உரிமத்தை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளிடம் வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் டி-20 கிரிக்கெட்டை இணைத்துக்கொள்ள ஐ.சி.சி. முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் அங்கு டி-20 உலகக் கிண்ணத் தொடரை நடத்தினால் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கும் தீவிர முயற்சிக்கு வலுசேர்க்கும் என்று ஐ.சி.சி. கருதுகிறது.
தற்போது டி-20 உலகக் கிண்ணத்தில் 16 அணிகள் பங்கேற்கின்றன. 2024ஆம் ஆண்டு டி-20 உலகக் கிண்ணத்தில் அணிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.