ஜேர்மனி உள்ளரங்க டென்னிஸ் தொடரில் ஒரு வார காலத்துக்குள் இரண்டு முறை சாம்பியன் பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையை அந்த நாட்டின் அலக்ஸாண்டர் ஸ்வரெச் பெற்றுள்ளார்.
ஜேர்மனி உள்ளரங்க டென்னிஸ் தொடரில் சாம்பியனான அவர் கொலோனில் நடைபெற்ற மற்றுமொரு உள்ளரங்க டென்னிஸ் தொடரில் சாம்பியனானார்.
அலக்ஸாண்டர் ஸ்வரெச்சின் எதிராளியாக இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினாவின் டியாகோ சவரெஸ்ட்மன் களமிறங்கினார். ஒரு மணித்தியாலமும், 11 நிமிடங்களும் சென்ற இந்தப் போட்டியை 6-2, 6-1 என ஸ்வரெச் கைப்பற்றி சாம்பியன் ஆனார்.
23 வயதுடைய அலக்ஸாண்டர் ஸ்வரெச்சுக்கு இது 13 ஆவது சர்வதேச டென்னிஸ் சாம்பியன் பட்டமாகும் .
இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், தரவரிசையில் முன்னேற வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் போட்டியின் பின்னர் ஸ்வரெச் கூறினார்.