February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2022: ஆர்.சி.பி அணியின் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் நியமணம்!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் பங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடருக்குப் பிறகு ஆர்.சி.பி அணியின் தலைவர் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார்.

அதேபோல, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த சைமன் கடிச், ஐக்கிய அரபு இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகினார். இதனால் அணியின் இயக்குநராக உள்ள மைக் ஹெஸ்சென், அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரர் சஞ்சய் பங்கர், ஆர்.சி.பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சஞ்சய் பங்கர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஆர்.சி.பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருப்பார் என்று அந்த அணியின் அதிகாரப்பூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அந்த அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக பணியாற்றினார்.

இதனிடையே,, கடந்த 2014 முதல் 2019 வரை இந்திய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் பணியாற்றியுள்ளார். அதன்பின் 2015-இல் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு 2016 வரை பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆர்.சி.பி அணி இதுவரை ஒருமுறை கூட ஐ.பி.எல் பட்டத்தை வென்றதில்லை. இறுதியாக கடந்த 2016-ஆம் அண்டில் விராட் கோலி தலைமையில் ஆர்சிபி அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.