November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நியூசிலாந்து டி-20 தொடர்: இந்திய அணியின் தலைவராக ரோகித் சர்மா நியமனம்

Photo: Twitter/ICC

நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள டி-20 தொடருக்கான இந்திய அணியின் தலைவராக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

டி-20 உலகக் கிண்ணம் நிறைவடைந்த பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி 17ஆம் திகதியும் (ஜெய்ப்பூர்), 2ஆவது போட்டி 19ஆம் திகதியும் (ராஞ்சி), 3ஆவது மற்றும் கடைசி போட்டி 21ஆம் திகதியும் (கொல்கத்தா) நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இத்தொடருகான 16 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி-20 தலைவர் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, புதிய தலைவராக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் உப தலைவராக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல இத்தொடருக்கான இந்திய அணியில் ஐ.பி.எல் தொடரில் பிரகாசித்த ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ; ஐயர், ஆவேஷ; கான், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சிரேஷ்ட வீரர்களான விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, மொஹமட் ஷமி ஆகியோருக்கு இத்தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி: ரோகித் சர்மா (தலைவர்), கேஎல் ராகுல் (உப தலைவர்), ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பாண்ட், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ஆவேஷ் கான், புவனேஸ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷல் படேல், மொஹமட் சிராஜ்.