July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: ஸ்கொட்லாந்துக்கு எதிராக போராடி வென்றது நியூசிலாந்து

Photo: Twitter/ICC

ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி- 20 உலகக் கிண்ண சுப்பர் 12 லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், குழு 2 இல் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்று அரை இறுதிக்கான வாய்ப்பை நியூசிலாந்து அணி அதிகரித்து கொண்டது.

டுபாயில் இன்று (03) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டிலின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஸ்கொட்லாந்து அணி வீரர்கள் கணிசமான ஓடட்டங்களை எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய மைக்கல் லீஸ்க் மட்டும் 42 ஓட்டங்களை எடுத்து நம்பிக்கை கொடுத்தார். இதனால் ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் 3 ஆம் இடத்தை நியூசிலாந்து அணி பிடித்துள்ளது.

எனவே, எஞ்சியுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறும்