July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய டி-20 அணியின் தலைவராகிறார் கே.எல் ராகுல்

Photo: Facebook/KL Rahul

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் கே.எல் ராகுல் இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்முறை டி-20 உலகக் கிண்ணத்தில் இந்திய கிரிக்கெட் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக படுதோல்வி அடைந்த இந்திய அணி, அரை இறுதிக்குச் செல்லும் வாய்ப்பு நிச்சயமாகிவிட்டது.

ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து விளையாடியதால் ஏற்பட்ட மனச்சோர்வே இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்கு காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் முடிந்ததும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.

மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

இந்தத் தொடரில் இந்திய அணிக்கு கே.எல் ராகுல் தலைவராக நியமிக்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டார தகவல்கள் கூறியுள்ளன.

ஆத்துடன், சிரேஷ்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, டி-20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு தலைவர் பதவியிலிருந்து விராட் கோலி விலக உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியா – நியூசிலாந்து இடையேயான டி-20 போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.