
Photo: Twitter/ICC
டி-20 உலகக் கிண்ணத்தில் நமீபியா அணிக்கெதிரான சுபர் 12 சுற்று லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 45 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.
டி20 உலகக் கிண்ணத் தொடரில் செவ்வாய்க்கிழமை இரவு அபுதாபியில் நடைபெற்ற 31 ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் – நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீரமானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, மொஹமட் ரிஸ்வான், பாபர் அசாமின் அதிரடியில் 20 முடிவில் 20 ஒவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்களை எடுத்தது.
நமீபியா அணியின் பந்துவீச்சில் டேவிட் வீஸி மற்றும் ஜான் ப்ரைலின்க் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, 190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது.
நமீபியா தரப்பில் அதிகபட்சமாக டேவிட் வைஸ் 43 ஓட்டடங்களையும், க்ரெய்க் வில்லியம்ஸ் 40 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியதுடன், இம்முறை டி-20 உலகக் கிண்ணத் தொடரில் அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு முதல் அணியாக தகுதிபெற்றது.