Photo: Twitter/ Afghanistan Cricket Board
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அஸ்கர் ஆப்கான், டி-20 உலகக் கிண்ணத் தொடரில் நமீபியா அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.
33 வயதான அவரது திடீர் ஓய்வு முடிவு ஆப்கானிஸ்தான் நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி அசத்தியது.
அத்துடன், குறித்த போட்டியில் நான்காவது வீரராகக் களமிறங்கிய அஸ்கர் ஆப்கான் 31 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
எனவே, தனது கடைசிப் போட்டியிலும் வெற்றியோடு அவர் கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுத்துள்ளார்.
இதனிடையே, நேற்று நடைபெற்ற போட்டியில் நமீபியா மற்றும் ஆப்கான் வீரர்கள் அவரது திறனை பாராட்டும் விதமாக கௌரவம் கொடுத்திருந்தனர்.
அஸ்கர் ஆப்கான் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளிலும் 114 ஒருநாள், 74 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்துக்கு எதிராக அறிமுகமான அஸ்கர் ஆப்கான், சுமார் 12 ஆண்டுகள் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார்.