July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: பங்களாதேஷ் வீரர் சகிப் அல் ஹசன் விலகல்!

பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான சகிப் அல் ஹசன் காயம் காரணமாக டி-20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் டி- 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் 12 சுற்றில் குழு 1 இல் பங்களாதேஷ் அணி இடம்பிடித்துள்ளது.

அந்த அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அடுத்ததாக தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது.

இந்த நிலையில், பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரரான சகிப் அல் ஹசன் காயம் காரணமாக டி-20 உலகக் கிண்ணத்தில் இருந்து விலகுவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சார்ஜாவில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சகிப் அல் ஹசனுக்கு தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனால் அவர், டி–20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து விலகி, மேலதிக சிகிச்சைகளுக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.