July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: மாலிங்கவின் சாதனையை முறியடித்த ரஷித் கான்

Photo: Twitter/ICC

சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர் எனும் பெருமையை ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் பெற்றுள்ளார்.

டி-20 உலகக் கிண்ணத் தொடரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழு 1 இற்கான போட்டியில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி விழ்த்தியது.

இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரஷித் கான் சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 53 போட்டிகளில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்தி உள்ளார் .

இதன்மூலம் டி-20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுக்களை எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதுவும் வெறும் 23 வயதில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னதாக இலங்கை வீரர் லசித் மாலிங்க 76 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இந்த நிலையில், மாலிங்கவின் அந்த சாதனையை தற்போது ரஷித் கான் முறியடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, டி-20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் அவர் 4 ஆவது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.