January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: மேற்கிந்திய தீவுகள் அணியில் ஜேசன் ஹோல்டர் சேர்ப்பு!

Photo: Twitter/ West Indies

டி- 20 உலகக் கிண்ணத் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் அனுபவ சகலதுறை வீரரான ஜேசன் ஹோல்டர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஒபெட் மெக்கோய், காயம் காரணமாக டி- 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக ஜேசன் ஹோல்டர், 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியில் இணைந்துள்ளார். இதற்கான அனுமதியை ஐ.சி.சி.யின் தொழில்நுட்பக் குழு வழங்கியுள்ளது.

29 வயதான ஜேசன் ஹோல்டர், மேற்கிந்திய திவுகள் அணிக்காக இதுவரை 27 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

நடப்பு டி- 20 உலகக் கிண்ண சம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி,  இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 55 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதன் பிறகு நடைபெற்ற 2 ஆவது போட்டியில் தென்னாபிரிக்காவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில் நாளை (29) சார்ஜாவில் நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியை மேற்கிந்திய தீவுகள் அணி எதிர்கொள்கிறது.

எனவே, மேற்கிந்திய தீவுகள் அணி அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமாயின் எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.