July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி- 20 உலகக் கிண்ணம்: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

Photo: Twitter/ICC

டி- 20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு எதிராக இன்று (24) விளையாடவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டி- 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் 12 சுற்றுப் போட்டிகள் நேற்று (23) ஆரம்பமாகியது. இந்த நிலையில், குழு 2 இல் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று இரவு டுபாயில் நடைபெறவுள்ளது.

இதனிடையே, இந்தியாவுடன் விளையாடவுள்ள 12 வீரர்களைக் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் மொஹமட் ரிஸ்வான், பக்கர் ஜமான் ஆகிய இளம் வீரர்களும், சிரேஷ்ட வீரர்களான மொஹமட் ஹபீஸ், சொஹைப் மலிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல, சுழல்பந்து வீச்சு சகலதுறை வீரர்களான இமாத் வசிம், சதாப் கான் ஆகியோரும், வேகப்பந்து வீச்சாளர்களான ஷஹீன் அப்ரிடி மற்றும் ஹசன் அலியும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதால் இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி, உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

12 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (அணித் தலைவர்), மொஹமட் ரிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), பக்கர் ஜமான், மொஹமட் ஹபீஸ், சொஹைப் மலிக், ஆசிப் அலி, ஹைதர் அலி, இமாத் வசிம், சதாப் கான், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூப்.