February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லா லீகா தொடர்; பார்ஸிலோனாவை வீழ்த்தியது ரியல் மெட்ரிட்

உலகப் பிரசித்திபெற்ற ஸ்பெய்னின் லா லீகா கால்பந்தாட்டத் தொடரில் புகழ்பெற்ற பார்ஸிலோனா கழக அணி 3-1 எனும் கோல் கணக்கில் ரியல் மெட்ரிட் கழக அணியிடம் தோல்வியடைந்தது.

போட்டியை சவாலாக ஆரம்பித்த ரியல் மெட்ரிட் அணி சார்பாக ஐந்தாவது நிமிடத்தில் வெல்வரேட் முதல் கோலைப் போட்டார். அடுத்த 2 நிமிடங்களில் பார்ஸிலோனா அணியின் பெர்டி கோலொன்றைப் போட முதல் பாதி 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.

இரண்டாம் பாதியில் பார்ஸிலோனா கழக அணி வீரர்கள் கோல் போடுவதற்கு தடுமாறினார்கள். என்றாலும் 63 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரியல் மெட்ரிட் அணி வீரரான ரமோஸ் கோலாக மாற்றினார்.

போட்டி நிறைவடையும் சொற்ப நேரத்தில் அதாவது 90 ஆவது நிமிடத்தில் லூகா மொட்ரிச் கோலடிக்க, ரியல் மெட்ரிட் அணி வெற்றியை தம்வசப்படுத்தியது.