January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சம்பளம் வாங்காமல் ஆலோசகராக சேவையாற்றும் டோனி

டி- 20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி சம்பளமின்றி செயல்படவுள்ளதாக பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.

டி- 20 உலகக் கிண்ணத்துக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இது இவ்வாறிருக்க, டி- 20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்படுவதற்கு சம்பளமாக டோனி எதையும் கோரவில்லை என பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை டி- 20 உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இந்திய அணி ஒக்டோபர் 24 ஆம் திகதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

அதற்கு முன் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுடன் பயிற்சிப் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.