January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்தார் மஹேல

Photo: Facebook/ Abu Dhabi Cricket 

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மஹேல ஜயவர்தன இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்து கொண்டார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன செயல்பட்டு வருகிறார்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே – ஒப் சுற்றுக்கான வாய்ப்பினை மும்பை இந்தியனஸ் அணி தவறவிட்டுள்ளதால், ஐந்து நாட்கள் முன்னதாகவே அவர் இலங்கை அணியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

முன்னதாக ஒக்டோபர் 16 முதல் ஒக்டோபர் 23 வரை 7 நாள் காலப்பகுதியில் இலங்கை அணியுடன் மஹேல ஜயவர்தன இருப்பார் என்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால், தற்சமயம் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மஹேல ஜெயவர்த்தனவின் சேவையைப் பெறுவார்கள்.

எனவே, 2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, முதல் தடவையாக மஹேல ஜயவர்தன இலங்கை அணியின் ஜேர்சியை அணிந்து கொண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.