Photo: Twitter/IPL
ஐ.பி.எல் தொடர்களில் ஒரே சீசனில் 600 ஓட்டங்களுக்கும் மேல் ஓட்டங்களை எடுத்த 3 ஆவது சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர் என்ற சாதனையை அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நிகழ்த்தியுள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் நடைபெற்ற முதலாவது தகுதிச் சுற்றில் டெல்லியை நான்கு விக்கெட்டுக்களால் வீழ்த்தி சென்னை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்தப் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக 50 பந்துகளில் 70 ஓட்டங்களை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பெற்றுக் கொண்டார். அத்துடன் சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் 70 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதன் மூலம், இம்முறை ஐ.பி.எல் தொடரில் 600 ஓட்டங்களைக் கடந்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணித் தலைவர் கே.எல். ராகுலுக்கு அடுத்தபடியாக ருதுராஜ் 600 ஓட்டங்கள் மைல்கல்லை இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் எடுத்துள்ளார்.
இதனிடையே, கே.எல்.ராகுல் 626 ஓட்டங்களுடன் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களுக்கான செம்மஞ்சள் தொப்பியை பெற்றுள்ளார்,
இந்தப் பட்டியலில் ஷிகர் தவான் 551 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும், பாப் டு பிளெசிஸ் 547 ஓட்டங்களுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளனர்.கிளென் மெக்ஸ்வெல் 498 ஓட்டங்களை எடுத்துள்ளார்