ஐக்கிய அரபு இராச்சியத்திலும், ஓமானிலும் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள டி- 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ள இறுதி 15 வீரர்கள் விபரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த குழாத்திலிருந்து 4 மாற்றங்களை இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொண்டுள்ளது.
கடந்த மாதம் 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டிருந்த போதும், 10 ஆம் திகதி வரை அணியில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஐ.சி.சி அனுமதித்திருந்தது.
அதன்படி, உபாதைக்கு முகங்கொடுத்திருந்த லஹிரு மதுசங்க மற்றும் நுவன் பிரதீப் ஆகியோருடன், கமிந்து மெண்டிஸ் மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் டி- 20 உலகக் கிண்ண குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர்களான பினுர பெர்னாண்டோ, லஹிரு குமாரவுடன், பெதும் நிஸ்ஸங்க மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் குழாத்துக்குள் இடம்பிடித்துள்ளனர்.
அத்துடன், அணியில் இடம்பெறுவாரா? என கேள்வியை எழுப்பியிருந்த, உபாதையிலிருந்து குணமடைந்து வரும் குசல் பெரேரா 15 பேர் கொண்ட இறுதி குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டி- 20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம்
தசுன் ஷானக (தலைவர்), தனன்ஜய டி சில்வா (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, அகில தனன்ஜய, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார