January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி- 20 உலகக் கிண்ணம்: இந்திய அணியில் ஜம்மு- காஷ்மீர் வீரர் உம்ரான் மாலிக் சேர்ப்பு

Photo: Twitter/IPL

டி- 20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக ஜம்மு- காஷ்மீர் வீரர் உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு- காஷ்மீரின் இளம் வேகப்பந்து வீச்சாளரான 21 வயதான உம்ரான் மாலிக், நடப்பு ஐ.பி.எல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.

மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கடைசி 3 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

வெறும் 3 போட்டிகளில் பங்கேற்றாலும் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து பந்துவீசி பலரது கவனத்தை ஈர்த்தார். இவரது திறமையைக் கண்டு விராட் கோலியும் வெகுவாக பாராட்டினார்.

இந்த நிலையில், இம்மாதம் 17 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் டி- 20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியின் வலைபயிற்சி பந்து வீச்சாளராக உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் சீசனில் 153 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அதிவேகமாக பந்து வீசியவர்களின் பட்டியலில் உம்ரான் மாலிக் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.