
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பந்துல வர்ணபுர கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மூன்று நாட்களுக்கு முன்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையின் முன்னாள் வீரரான சனத் ஜயசூரிய, வர்ணபுர விரைவில் குணமடைவதற்காக பிரார்த்திக்குமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முதலாவது டெஸ்ட் அணித்தலைவரான பந்துல வர்ணபுர, 1975 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்துள்ளார்.