January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கேஎல் ராகுலின் அதிரடியில் சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்!

ஐபிஎல் டி-20 போட்டியிலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ஐபிஎல் தொடரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற 53 ஆவது லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச திர்மானித்தது.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி, பாப் டூ பிளெசிஸின் அதிரடியான அரைச் சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக பாப் டூ பிளெசிஸ் 76 ஓட்டங்களை எடுத்தார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் அணி, கேஎல் ராகுலின் அதிரடி ஆட்டத்தால் 13 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல், 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளை விளாசி 98 ஓட்டங்களை எடுத்தார். சென்னை அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில், இம்முறை ஐ.பி.எல் தொடரில் பிளே-ஓப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி, ராஜஸ்தான், டெல்லி தற்போது பஞ்சாப் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்து பின்னடைவை சந்தித்துளளது.

இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி 5வது இடத்தில் உள்ளது. தோல்வியை தழுவினாலும் சென்னை அணி 18 புள்ளிகளுடன் அதே இரண்டாவது இடத்திலேயே தொடர்கிறது.