
Photo: Twitter/IPL
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது
ஐபிஎல் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 51 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் நாணய சுழற்ச்யில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 90 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
மும்பை அணி தரப்பில் நாதன் குல்டர் நைல் 4 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் ரோகித் சர்மா 22 ஓட்டங்களுடனும், சூர்யகுமார் யாதவ் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன் அரைச் சதத்தின் உதவியால் 8.2 ஓவர்களிலேயே மும்பை அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே–ஒப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டதுடன், புள்ளிப் பட்டியலில் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியது.
அதேசமயம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நடப்பு சீசனில் பிளேஒப் வாய்ப்பை இழந்துவிட்டது.