July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: இலங்கை அணி விளையாடவுள்ள பயிற்சிப் போட்டிகள்!

டி-20 உலகக் கிண்ணம் தகுதிகாண் போட்டிகளுக்கு முன்பாக இலங்கை கிரிக்கெட் அணி நான்கு பயிற்சிப் போட்டிகளில் விளையாட உள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்திலும், ஓமானிலும் இந்த மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சியின் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் இலங்கை அணி, ஓமானில் இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு இன்று பயணமாகிறது.

ஓமான் அணியுடன் எதிர்வரும் 7 ஆம் திகதியும், 9 ஆம் திகதியும் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் இலங்கை அணி விளையாடும்.

இதனையடுத்து டி-20 உலகக் கிண்ணத்துக்கான பயிற்சிப் போட்டிகளில் இலங்கை அணி விளையாடவுள்ளது.

இதில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி ஒக்டோபர் 12 ஆம் திகதியும், பபுவா நியூகினியா அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி ஒக்டோபர் 14 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

இம்முறை டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதலாவது சுற்றில் (தகுதிகாண்) A குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, முதல் போட்டியில் நமீபியாவை அபுதாபியில் ஒக்டோபர் 18ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அயர்லாந்தை அபுதாபியில் 20 ஆம் திகதியும், நெதர்லாந்தை சார்ஜாவில் 22 ஆம் திகதியும் எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.