
Photo: Sri Lanka Cricket
இலங்கை ஏ கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீரர் ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான தொடர், எதிர்வரும் மாதம் 28ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
இந்த நிலையில், இலங்கை ‘ஏ’ அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ருமேஷ் ரத்நாயக்க இதற்கு முன்னர், இலங்கை தேசிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மற்றும் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக செயல்பட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை ‘ஏ’ அணியின் பயிற்றுவிப்பாளராக இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் பணியாற்றியுள்ளார்.
தற்போது, இவர் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் உள்ள இலங்கை அணியின் உயர் செயல்திறன் மையத்தில், வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வருகின்றார்.
ஏற்கனவே இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் அவிஷ்க குணவர்தன செயல்பட்டு வரும் நிலையில் இவரது நியமனமும் அமைந்துள்ளது.