Photo: IPL
ஐ.பி.எல் போட்டிகள் வரலாற்றில் முதல் முறையாக இரண்டு போட்டிகளை ஒரே நேரத்தில் நடத்த பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.
14 ஆவது ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டம் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது.
எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளதால் அனைத்து அணிகளுமே சம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் விளையாடினாலும், சென்னை மற்றும் டெல்லி அணிகள் ஏற்கனவே பிளே-ஒப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன.
ரோயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 5 அணிகளுக்குமே பிளே-ஒப் வாய்ப்பு இருப்பதால், இனிவரும் அனைத்து போட்டிகளுமே முக்கியமானதுதான்.
இந்த நிலையில், ஒக்டோபர் 8 ஆம் திகதியுடன் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைகின்றன. எனவே, 8 ஆம் திகதி கடைசி இரண்டு லீக் போட்டிகளும் நடைபெறவுள்ள நிலையில், அந்த 2 போட்டிகளையும் ஒரே நேரத்தில் நடத்த பி.சி.சி.ஐ தீர்மானித்துள்ளது.
இதன்படி, மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ரோயல்ஸ் சேலஞ்சர்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகளுமே அக்டோபர் 8 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஐ.பி.எல் போட்டிகள் வரலாற்றில் முதல் முறையாக இரண்டு போட்டிகள் ஒரே நேரத்தில் நடக்கவுள்ளன.