இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சிரேஷ்ட வீரரான கபில் தேவுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கபில் தேவின் நிலை ஓரளவுக்கு தேறியுள்ளதாகவும், மேலும் பல மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.