May 2, 2025 16:39:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சவுதி கழகத்துடனான போட்டியில் இலங்கை கால்பந்து அணிக்கு அபார வெற்றி

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள மன்னர் பவாத் அரங்கில் நேற்று  நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் ஜுப்பா கழகத்தை 6 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை அணி மிக இலகுவாக வெற்றிகொண்டது.

இலங்கை சார்பாக வசீம் வசீம் ராஸிக் (2), ஆக்கிப் (1), கவிந்து (1), ரிப்கான் (1), எடிசன் (1) ஆகியோர் கோல்களைப் போட்டனர்.

மாலைதீவுகளில் அக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள 5 நாடுகளுக்கு இடையிலான தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் (SAFF) போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி கடந்த 7 தினங்களாக சவுதியில் பயிற்சியில் ஈடுபட்டுவந்தது.

இதனிடையே, எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை சவுதியிலிருந்து விமானம் மூலம் புறப்படும் இலங்கை அணி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்து, மாலைதீவுகள் நோக்கி பயணிக்கும்.