
Photo: ICC
ஐ.சி.சி.யின் 7 ஆவது டி- 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான உத்தியோகபூர்வ பாடல் இன்று (23) வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2021 டி-20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டு டி-20 உலகக் கிண்ணத் தொடருக்கான உத்தியோகபூர்வ பாடலை ஐ.சி.சி இன்று வெளியிட்டது.
1.30 நிமிடங்களை கொண்ட இந்தப் பாடலை அனிமேஷன் காணொளியாக வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி, மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரொன் பொல்லார்ட், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், அவுஸ்திரேலியாவின் கிளென் மெக்ஸ்வெல் ஆகிய வீரர்களின் அனிமேஷன் படங்கள் முக்கிய இடத்தை பெற்றுள்ளன.
‘லிவ் த கேம்’ என்ற இந்தப் பாடலுக்கு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். அத்துடன், சுமார் 40 பேர் இணைந்து இந்த காணொளியை உருவாக்கியுள்ளனர்.
தற்போது இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Let the world know,
This is your showCome #LiveTheGame and groove to the #T20WorldCup anthem
pic.twitter.com/KKQTkxd3qw
— ICC (@ICC) September 23, 2021