
இலங்கை அணியின் அனுபவ வீர்ர்களில் ஒருவரான அஞ்சலோ மெத்யூஸ், மீண்டும் தன்னுடைய பயிற்சிகளை ஆரம்பித்துள்ள காணொளியை சமுக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஞ்சலோ மெத்யூஸ் விளையாடியிருந்தார்.
அதன்பிறகு நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக் கொள்வதாக அறிவித்த அவர், இலங்கையில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடனான தொடரிலும் விளையாடவில்லை.
எனவே, கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காத அஞ்சலோ மெத்யூஸுக்கு, அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ண இலங்கை குழாத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
எவ்வாறாயினும், தற்போது மீண்டும் அவர் கிரிக்கெட் பயிற்சிகளை ஆரம்பித்துள்ள காணொளியை சமுகவலைத் தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை அணி எதிர்வரும் நவம்பர் மாதம் சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
எனவே, இலங்கை டெஸ்ட் குழாத்தில் அஞ்சலோ மெத்யூஸ் மீண்டும் இடம்பிடிப்பார் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.