January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹொங்கொங்கில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு வரலாற்று வெற்றி

ஹொங்கொங்கில் நடைபெற்று வருகின்ற மகளிருக்கான இரண்டாம் நிலை டி – 20 போட்டியில் ஹொங்கொங் விளையாட்டு கழகத்தை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 92 ஓட்டங்களையும், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் மகளிர் அணி 91 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியொன்று முதல் முறையாக முன்னணி கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக இவ்வாறானதொரு வெற்றியொன்றைப் பதிவு செய்தது.

இதில் சிறப்பம்சம் என்னவெனில், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது ஆறு மாதங்களுக்கு முன் ஹொங்கொங்கில் வைத்து ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த அணி விளையாடிய முதல் போட்டியும் இதுவாகும்.